உலகம்விளையாட்டு
Trending

T 20,22 ஆவது போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி!

அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் துபாய் சர்வேதச மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 22 ஆவது போட்டியில் 77 ஓட்டங்களால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற ஓமான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.

இதன் பிரகாரம்,அயர்லாந்து அணி இந்தப் போட்டியில் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button