இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

T20, உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

2026 ஆம் ஆண்டுக்கான T20, உலக கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி சம்பியன் ஆகியுள்ளது.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 இறுதிப் போட்டியில், இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.

அகமதாபாத் – நரேந்திரமோடி மைதானத்தில் நேற்றிரவு(08) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்படுத்திய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக ‘சஞ்சு சாம்சன்’ 46 பந்துகளுக்கு முகம் கொடுத்து 89 ஓட்டங்களை பெற்றார். ‘ஈஷான் கிஷன்’ 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 54 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு 256 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்திலேயே முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்களை இழந்து பின்னடைவைச் சந்தித்தது.

அதற்கமைய நியூசிலாந்து அணி 19 ஆவது ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக ‘ரிம் சைபார்ட்’ 26 பந்துகளுக்கு முகம் கொடுத்து 52 ஓட்டங்களையும், ‘மிட்செல் சாண்ட்னர்’ 35 பந்துகளுக்கு முகம் கொடுத்து 43 ஓட்டங்களையும் பெற்றார்.

இதன் அடிப்படையில் இந்திய அணி 2026 ஆம் ஆண்டிற்கான T20 உலக கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button