Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

வடக்கு மாகாணம்

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!

வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நேற்று(28) இரவு இடம் பெற்றது.

இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இவ்வாறான ஒழுங்குபடுத்தலின் கீழ் ஒரு டிப்பர் மணலை 25 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும். வாகனத்திற்கான போக்குவரத்து செலவுகளோடு 55 ஆயிரம் ரூபா விலிருந்து 65 ஆயிரம் ரூபா வரையான விலைகளில் அவற்றை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மணலை கொண்டு செல்கின்ற அனுமதிகள் இனி வரும் காலங்களில் பகல் நேரத்தில் மட்டுமே வழங்கப்படும்.

பிற மாவட்டங்களில் இருந்து கனிய வளங்கள் கொண்டுவரப்படுவதைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் தேவைகளை உள்ளூரிலேலே பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video