
யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் வீடு அற்ற அஸ்வெசும பயனாளிக்கான அமைக்கப்பட்ட வீடு உத்தியோகபூர்வமாக நேற்று(15) கையளிக்கப்பட்டுள்ளது.
வீடற்ற குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Follow Us



