இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

இந்திய மீனவர்களின். ஆக்கிரமிப்புக்கு எதிராக புங்குடுதீவு மீனவர்கள் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று (19) காலை 11
மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் புங்குடுதீவு மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் நண்டு வலைகளை வீசிவிட்டு காத்திருந்த போது, இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து 75 இலட்சம் ரூபா மீனவர்களின் வலைகளை அறுத்து சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு ஆலடி சந்தியில் ஒன்று கூடிய புங்குடுதீவு மீனவர்கள் வீதி வழியாக புங்குடுதீவு வாடி வரைக்கும் ஊர்வலமாக சென்று, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button