உள்நாட்டு
Trending

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு – யாழ்.இந்துக்கல்லூரியில்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும் போதைப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் இதன்போது முன் வைக்கப்பட்டன.

மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான தெரு நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா, யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன,கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button