இலங்கை
Trending

அமெரிக்காவின் அத்துமீறலுக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம்!

சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுவேலாவுக்குள் பலவந்தமாக அத்துமீறி பிரவேசித்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை கடத்தி, ஐக்கிய அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டை கடுமையாக கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டைப் போன்றே வெனிசுவேலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் அந்நாட்டு மக்களுக்கே உண்டு. அதனை மீறுவதற்கு எந்தவொரு பலவானுக்கும் உரிமை இல்லை.

நவீன சமூகமும், அரச ஆளுகையும் மிகவும் நாகரிகமுள்ளதாக அமைய வேண்டுமென்பது பொதுவான ஏற்றுக்கொள்ளலாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், அரசுகளின் சுதந்திரம் மற்றும் சுயாதீனத்தன்மை முழு உலகும் ஏற்றுக்கொள்கின்ற கோட்பாடுகளாகும்.

எந்த காரணத்தின் பேரிலும் அவற்றை மீறி, நாடுகள் மீது இராணுவ ரீதியான இடையீட்டை செய்வதோ அல்லது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதோ நவீன நாகரிக உலகத்தில் நியாயமானதாக அமையமாட்டாது.

அத்தகைய நிலைமைக்குள் ஐக்கிய அமெரிக்காவால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவ இடையீட்டை உலகில் எவருமே அனுமதிக்க போவதில்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்.

எனவே, ஐக்கிய அமெரிக்காவால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ ரீதியான ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.

வெனிசுவேலாவின் தன்னாதிக்க வழியுரிமைக்காகவும் சுயாதீனத் தன்மைக்காகவும் குரல் கொடுக்கிறோம்” என்றுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button