Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்குற்றவியல்வடக்கு மாகாணம்
Trending

யாழிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட பெருந்தொகை தங்கம் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு பெருந்தொகை தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதகல் கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகு கடலில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகள் மீட்டுள்ளன.

அதனை அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ள கடற்படை, படகையும் கைப்பற்றியுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button