இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்.வடமராட்சி துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு சந்தேக நபரொருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடிப் பொலிஸார் இன்று (18) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது இந்த
50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு,
78 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும்
கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏனைய சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button