இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடத்திற்கான ஜனவரி மாதத்திற்கான வாழ்வாகாரத் திட்டத்தினை திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஊடாக எமது கபிலர் சமுதாய மேம்பாட்டு பேரவையானது மேன்காமம் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த திரு.இலெட்சுமன் செல்வராசா , என்பவருக்கு வழங்கியது.
திரு.இலெட்சுமன் செல்வராசா குடும்பமானது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தினை இழந்து வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்போதைய வாழ்வாதாரத் தொழிலாக தேங்காய் பறித்து அதில்வரும் சிறு பணத்தொகையினைக் கொண்டு தமது குடும்பத்தினை நடாத்தி வருகின்றனர்.
இவர் எமது நிறுவனத்தினூடாக கேட்டுக் கொண்ட உதவிக்கமைய எமது நிறுவனமானது திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் புதிய வாழ்வாதாரத்தினை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஆடு வளர்ப்புக்கான கூடாரம் அமைப்பதற்கான தகரம் மற்றும் அதற்கான இதரப் பொருட்களை வழங்கியது.
இவ் நிகழ்வில் திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் திரு.N. பிரதீபன் ஜயா அவர்களும் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் திருமதி. சுகந்தினி அம்மணி அவர்களும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.