எழுச்சி கொள்கிறது வடக்கு கிழக்கு போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு!!!!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு கிழக்கில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பல்சமய ஒன்றியங்கள் பொது அமைப்புகள் அனைவரும் பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (31) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மட்டக்களப்பு அமெரிக்க மெசின் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் தலைவர்களும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை யானது மேற்படி கூட்டமானது கிழக்கின் எழுச்சி மிகு கூட்டமாக அமைந்திருந்தது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிழக்கு மாகாண தலைவர்களும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்ததுடன் பல பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த கூட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண தமிழ் பேசும் சமூகம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு எழுச்சி மிகு ஆதரவை வழங்கி உள்ளது.