திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (TDUSA) ஏற்பாட்டிலும் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் நிதி அனுசரனையிலும் திருமலை மாவட்ட மாணவர்களின் கல்வியின், ஒரு அங்கமாக விரைவான கற்றலை மேம்படுத்துவதற்கான போட்டியினை (DO YOU KNOW QUIZ-2021) நடாத்த திட்டமிட்டிருப்பதால் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் 2021.02.18 அன்று எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.
அத்துடன் எதிர்கால கல்விசார் அபிவிருத்தி செயற்பாடுகளில் எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையும்¸ திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து சேவையாற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் எமது நிறுவனம் சார்பாக நிறுவனத்தின் பணிப்பாளரும்¸ கல்வித்திட்ட இணைப்பாளரும் , EDUSL சார்பில் அதன் தலைவர்¸செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
The students of University of Trincomalee has organized a Quiz competition as part of improving the students education and to gain knowledge in an efficient method.
This event is sponsored by Kabilar social advancement Council . When our director and coordinator of Education with the students as part of the initial stages of planning this event..