BatticaloaEducationEventsJaffnaKilinochiMothurNewsSri LankaTrincoWorld

பல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021

வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கற்றல் கற்பித்தல் வசதிகள் குறைந்த 20 பாடசாலைகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டு¸ E-Learning முறைமையினை மேம்படுத்தும் நோக்கில் பல்லூடக எறிவைகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2021.02.18 அன்று இடம்பெற்றது.

கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் பணிப்பாளர் திரு.S.வசந்தநேசன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்விஅமைச்சின் செயலாளர் திரு. M.C.L. Fernando அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.A.G. Fazal அவர்களும்¸ பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. R. சுதர்சன் அவர்களும் கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திரு.T. ரவி அவர்களும்¸ கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் திரு.S. புவனேந்திரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ICT ஆசிரிய ஆலோசகர்கள்¸ பாடசாலை அதிபர்கள்¸ ICT ஆசிரியர்கள் மற்றும் கபிலர் சமூதாய மேம்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்படையச் செய்தனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் தனது உரையில் “கிழக்கு மாகாணம் கல்வி அடைவுமட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதனால் இவ்வாறான கற்றல் ஊக்குவிப்பு உதவிகள் பெரிதும் பயனுடையது என கூறியதோடு¸ வலயக்கல்வி பணிப்பாளர்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள் இச்செயல்திட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குமாறும்” கேட்டுக்கொண்டார்.

எமது பணிப்பாளர்,பேரவையின் கல்விதிட்ட செயற்பாடுகள் தொடர்பான சுருக்கமான விளக்கத்தினை வழங்கி எமது திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு கல்விஅமைச்சு¸ வலயக்கல்வி அலுவலகம்¸ மற்றும் பாடசாலைகளின் பூரண ஆதரவும் அவசியம் என்பதனை வேண்டிக்கொண்டார்.

பாடசாலை அதிபர்கள் தமது கருத்தினை தெரிவிக்கையில் “கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவைக்கு நன்றிகளை தெரிவித்ததோடு பேரவையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தங்களது உதவிகளையும்¸ ஆதரவினையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

நன்றி.

Program of Donating Multi Media Projectors-2021

Kabilar Social Advancement Council is an organization which is focus on the development of the Education in North, East and Upcountry areas.

As an other step towards the above mentioned worthy course we selected 20 Schools from remote areas with less facilities to donate Multimedia projectors. The Function was held on 18th Feb 2021 at Ministry of Education, Eastern Province, Trincomalee.

Mr.M.C.L. Fernando( The Secretary, Ministry of Education, Trincomalee) to Grace the occasion as the chief guest and the other distinguish guest are Mr.A.G. Fazal (Assistant Secretary Education), Mr.R. Suthershan (Deputy Director of Education), Mr.T. Ravi (Zonal Director of Education, Kalkudah), Mr.S. Puvanenthiran (Zonal Director of Education), Principals, ICT teachers and WelWishers from the selected schools also participated this event.

Addressing the Chief Guest Mr.M.C.L. Fernando appreciated the effort done by the Kabilar Social Advancement Council and he further requested all the schools to get the maximum use from the donated Multimedia projectors.

Also Mr.S. Vasanthanesan ( The Director of Kabilar Social Advancement Council) welcomed all the guest and he explained about the Education and other projectors of Kabilar.

All the Schools principals and representatives also extended their heartiest gratitude for the donation. All the staff members of the Kabilar Organization participated the event and we wish to thank each and every one who helped to make this a successful event.

Thank you.

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button