
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அரசு நிறுவனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று(31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் வெளியிட்ட சிறப்புச் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையின்படி, அரசு நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்ரிக்கின் பயன்பாட்டைத் தடுக்க, நிறுவனங்களின் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us



