இந்தியாஇலங்கை
Trending

இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!

எரிபொருள் ஏற்றிய இந்தியக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை இன்று(29) வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

‘ஹரி ஆனந்த்’ என்ற கப்பலில், 36 ஆயிரம் மெற்றிக் தென், எரிபொருள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 18 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும், 18 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலும் அடங்கியுள்ளன.

கப்பலிலிருந்து கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருளை ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button