Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
கண்டன அறிக்கை வெளியிட்ட ஈரானிய உச்சத் தலைவர்! - Tamilinfo.net
உலகம்
Trending

கண்டன அறிக்கை வெளியிட்ட ஈரானிய உச்சத் தலைவர்!

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே காரணம் என அந்தக் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தளபதிகளின் மரணம் ஈரானியப் படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு “குலைவையும் ஏற்படுத்தாது” எனவும், “ஈரானியப் படைகளின் வரிசை மிகப்பெரியது” எனவும் அந்த அறிக்கையில் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மஜித் காதெமியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தனது தந்தையைத் தொடர்ந்து ஈரானின் உயர் தலைவராகப் பதவியேற்ற மொஜ்தபா கமேனி, இதுவரை பொது இடங்களிலோ அல்லது ஈரானிய அரச தொலைக்காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலோ தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button