
நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் ஏப்ரல் 22 முதல் மே 04 ஆம் திகதி வரை இடம்பெறும் என
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த செய்முறை பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள ஆயிரத்து 198 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 587 பேர் தோற்றவுள்ளனர்.
பாடம் 41, மேலைத்தேய இசை பாடத்திற்கான கேட்டல் பரீட்சை ஏப்ரல் 26 திகதி உரிய பரீட்சை மையங்களில் நடைபெறும்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன
என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
Follow Us



