இலங்கைஉலகம்

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” - தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!

முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பான விடயத்தில் “விசித்திரமான சட்டம்” அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06) உரையாற்றும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சுரேஷ் சாலேவை சந்திக்க வருபவர்கள் கட்டாயமாக பொலிஸ் அறிக்கை ஒன்றை பெற்றுவர வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால், 21 வயதான சுரேஷ் சாலேவின் மகனுக்கே தனது தந்தையை சந்திக்க பொலிஸ் அறிக்கை ஒன்றை பெற்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது மிகவும் விசித்திரமான சட்டமாகும் என்றும், இதுபோன்ற நடைமுறைகள் சட்டத்தின் அடிப்படைகளையே கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுரேஷ் சாலே சந்தேகநபராக அறிவிக்கப்படாத நிலையில் இருந்தபோதும் அவரை கைது செய்து தடுப்பில் வைத்திருப்பது தீவிரவாதத்தை ஒடுக்கும் சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறும் நடவடிக்கையாகும் எனவும் நீடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button