Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்
Trending

இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Paul Stephens, அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ பயண ஆலோசனைகளில் இலங்கை குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலாவிற்கு அபாயமான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் அவை தவறான புரிதலின் அடிப்படையில் வெளியானவை என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவுஸ்திரேலிய பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு தொடர்பான எந்த விசேட பாதுகாப்பு எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அத்துடன், அவுஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ பயண ஆலோசனைகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமே வெளியிடப்படும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவுஸ்திரேலிய உயர்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video