
பேருந்து கட்டணத் திருத்தம் செய்யப்படாததால் சில தனியார் பேருந்து சங்கங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன.
இதனால் இன்று(24) காலை பிரதான பேருந்து நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
டீசல் விலை அதிகரித்ததால் பேருந்து கட்டணத்தை திருத்த வேண்டும் என சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தன.
நேற்று (22) கட்டண திருத்தம் வழங்குமாறு கோரியிருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் இன்று சேவையை புறக்கணிக்க தீர்மானித்ததாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Follow Us



