இலங்கை
Trending

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நிலைபெறும்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“தேசத்தின் சுதந்திர நாளென்பது வரலாற்றின் ஒளியடையாளமான நாளாக மட்டுமின்றி, எதிர்காலத்தின் மறுமலர்ச்சி யுகத்திற்கான உறுதிமொழியாகவும் திகழ்கிறது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும். மக்களுக்கு விரைவில் உண்மையான சுதந்திரக்காற்றை அனுபவிக்கக்கூடிய சூழல் உருவாகும்.

சுதந்திரமானது அதிகாரவர்த்தகத்திற்குரியதல்ல, மக்களுக்கு உரியதாகும். அதை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த எமது ஆட்சியில் இடமில்லை.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் நிலையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்பு நாள் நாட்டின் மறுமலர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒருமை உணர்வையும் ஏற்படுத்தும் நாளாகவும் இருக்கும்.

சுதந்திரத்தை மதிப்பதும், பாதுகாப்பதும், வளர்ப்பதும் எமது கடமையாகும்.” – என அந்தச் செய்தியிலுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button