இலங்கை
Trending

புதிய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி - அரசாங்க அதிபர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே.பீ.ரீ.டி.சில்வாக்கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(03) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button