இலங்கை
Trending

இலங்கைக்கு மேலதிக எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா!

இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க சீனா முன்வந்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையவுள்ளது.

இது ‘சினோபெக்’ நிறுவனத்தின் வழமையான இருப்புகளுக்கு மேலதிகமானதாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், அங்கிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதியை வழங்குமாறு இலங்கை அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க விசேட தூதுவர் செர்ஜியோ கோர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 30 நாள் சலுகைக்காலம் ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனினும், குறைந்தது மூன்று மாத கால அனுமதியாவது கிடைத்தால் மட்டுமே ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர முடியும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் மாதம் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button