
யாழ். குறிகாட்டுவான் – நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை படகு, சேவை மீண்டும் இன்று(29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தாரகை படகு, பழுதடைந்தமை காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் படகு சேவை தொடர்பாக நேற்று முன்தினம்(27) பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடற்படையினரின் உதவியோடு நெடுந்தாரகை படகு திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தாரகை படகை நிரந்தரமாக திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow Us



