பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 2ஆவது
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டாக்கா
‘ஷேர் இ பங்களா’ தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(13) இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய துடுப்படுத்த ஆடிய பாகிஸ்தான் அணி 47.3
ஓவர்கள் சகல விக்கட்களையும் இழந்து 274
ஓட்டங்களைப் பெற்றது.
இதன்போது மழை குறுக்கிட்டதால் ‘டக்வொர்த் – லூயிஸ்’ முறைப்படி வெற்றிதோல்வி தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, பங்களாதேஷ் அணிக்கு 32 ஓவர்களில் 247 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வெற்றி இலக்கை நோக்கித் துடுப்படுத்தாடிய பங்களாதேஷ் அணி 23.3 ஓவர்களில் 114 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அணித் தலைவர் ‘நஸ்முல் ஹொசைன்’ ஷான்டோ அஃப்டியின் பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி 6.3 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
அதற்கமைய 2ஆவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நிறைவடைந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.
நாளை நடைபெறவுள்ள 3ஆவது போட்டி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.



