இலங்கைஉலகம்பிரான்ஸ்மங்கையர் அரங்கம்
Trending
பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக ஈழத்தமிழர் ஆதித்யா ஆனந்தராசா நியமனம்

பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
“பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது.
இதன்போது ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதித்யா ஆனந்தராசா, யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பகுதியைச் பூர்வீகமாக கொண்டவர்.
சிறுவயதிலிருந்தே சமூக சேவை மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய கல்வி மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்டு வெளிநாட்டில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
தன்னுடைய19 வயதிலேயே நகராட்சிமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
தற்போது தனது 25 வயதில் துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Follow Us



