இலங்கை
Trending

புதிய பேருந்து கட்டணங்களை காட்சிப்படுத்துவது கட்டாயம் – வீதிப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவிப்பு!

அதிகரிக்கப்பட்டுள்ள புதிய போருந்துக் கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‎இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

‎பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.

‎இதனைப் பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதனை மீறிச் செயற்படுவோரின் ‎பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

‎கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது

பேருந்துக் கட்டணங்கள் ‎கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் யவகையில் 12.19 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button