இலங்கை
Trending

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் கூரிய ஆயுத்ததால் குத்திக் கொலை!

கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டுப்பட்டி தெரு – கதிரேஷன் வீதிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று(04) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button