உலகம்
Trending
வெனுசுவேலாவில் 6இலட்டத்து 80 ஆயிரம் சிறுவர்களுக்கு உடனடி உதவி தேவை: யுனிசெப் தெரிவிப்பு!

வெனிசுவேலாவில் சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகளின் தேவைப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவில் கடந்து 24 ஆம் திகதி நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து இந்த உதவி தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நில அதிர்வால் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் நோயாளிகளைக் கையாள முடியாத அளவிற்கு நெருக்கடியில் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us



