உலகம்
Trending

சமாதான அறிவிப்பு காலத்திலும் தனது படையை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்கா!

மத்திய குழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகக் கூறும் அமெரிக்கா, மறுபுறம் தனது இராணுவப் பலத்தை விரைவாக அதிகரித்து வருகின்றது.

மத்திய கட்டளை தலைமையகத்தின் தரவுகளின்படி, தற்போது இந்த பிராந்தியத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவர்களோடு 200 போர் விமானங்கள் மற்றும் இரண்டு பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இராணுவப் பலப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேலதிகமாக ஆயிரம் படையினரைக் கொண்ட 82வது வான்வழிப் பிரிவு அண்மையில் இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 5 ஆயிரம் கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்ட இரண்டு கடல்சார் அதிரடிப்படைப் பிரிவுகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ள போதிலும், மறுபுறம் தனது படையை, முன்னெப்போதும் இல்லாத வகையில் களமிறக்கி வருகின்றது.

அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு, அதற்கு முரணான வகையில் பாரிய போருக்கான தயார் நிலையை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருவதை இந்த நகர்வுகள் வெளிப்படுத்துவதாக போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button