உலகம்
Trending

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஐ தாண்டியது!

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 பேரைக் தாண்டியுள்ளதாக அந்த நாட்டின் இடைக்காலத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அரச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கை பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பல்வேறு நாடுகளும் உதவிவருகின்றன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button