இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

யாழ். ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்.ஊரெழு கிழக்கு
ஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார்.

40 வயதுடைய கிருஷ்ணபிள்ளை தர்மசுரேஷ் என்பவரே காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் திருத்து நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (26) காலை தனது கடைக்கு சென்றுள்ளார்.

மாலையாகியும் வீடு திரும்பாத்தால் உறவினர்கள் தேடுதல் செய்ததோடு, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் இவரைக் கண்பவர்கள் 0772033264, 0770269716 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button