செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம்!

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் செம்மணிச் சந்தியில் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் இந்தப் போராட்டம், 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளை 17 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டம் இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது.
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் ஆகியோர் நேற்றிரவு(15) வருகைதந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.




