Artist AreaNewsWorld
பிரபல நடிகர் மரணம்! சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா?
இந்த 2020 ல் அநேக மாதங்களை கொரோனா விழுங்கி விட்டது எனலாம். இன்னும் வெளிநாடுகளில் இதன் தாக்கம் அதிகம் இருப்பதை செய்திகள் வாயிலாக நாம் அறியமுடிகிறது.
சினிமா வேலைகளும் அதனை சார்ந்தவர்களின் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் டேவிட் பிரவுஸ் நேற்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஸ்டார் வார்ஸ் படத்தின் டார்த் வேடர் கதாபாத்திரத்திரம் மூலம் பிரபலமானவர். ஜேம்ஸ் பாண்டின் கேசினோ ராயல் படத்திலும் நடித்துள்ளார்.
திறமையான நடிகரான டேவிஸ் சினிமாவிற்கு வருமுன் பளுதூக்கும் வீரராக இருந்து வந்தார்.
கடந்த 2016 ல் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற இவர் லண்டனில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
85 வயதான அவர் உடல் நலக்குறைவால் லண்டனில் நேற்று காலமானார்.