
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண அரையிறுதி 2ஆவது போட்டியில்,
இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பாய் வான்கடே மைதானத்தில்
நேற்றிரவு (05) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய துடுப்படுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக, சஞ்சு சாம்சன் (Sanju Samson)
42 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றார்.
254 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக (Jacob bethell) 48 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்றார்.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் (sanju samson) ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, T20 உலகக் கிண்ண இறுதி போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில்
எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில்,
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.



