இலங்கை
Trending

இலங்கை வரும் இந்திய துணை ஜனாதிபதி!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக நாளை (19) இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார்.

இந்திய நிதியுதவியில், முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுவரும் மூன்று மருத்துவமனைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button