
இலங்கை தனது உண்மையான நண்பன் யாரென்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவென இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் (Reuven Azar) தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிராந்திய மோதல்கள் மற்றும் சர்வதேச அரசியல் சூழலைக் கருத்திற் கொண்டு அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சவாலான காலப்பகுதிகளில் தமக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை அடையாளப்படுத்துவது ஒரு நாட்டின் எதிர்கால வெளியுறவுக் கொள்கைக்கு இன்றியமையாதது என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் தெரிவித்துள்ளார்

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)