வடக்கு மாகாணம்

யாழ்.சரசாலை வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button