Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!

இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கையிருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மேலும், மே மாதத்திற்குத் தேவையான 33 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட கப்பல் ஒன்று ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட கப்பல் ஒன்று ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button