
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 21 பவுண் தங்க நகைகள் கெள்ளையிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் யாழ்.வடமராட்சி, கரவெட்டி மத்தி, கோவில் சந்தை பகுதியில் நேற்று (08) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த மூவரும் உறக்கத்திலிருந்த சமயம் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 21 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us



