
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், முதலாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
அந்தப் பணி நிறைவடைந்ததும் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)