- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
தற்போது ஒன்லைன் மூலமான பணக்கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக கூகுள் பே, சாம்சுங் பே போன்ற பல்வேறு ஒன்லைன் பணக்கொடுக்கல் வாங்கல் சேவைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பினூடாக இச் சேவையை வழங்கக்கூடிய வாட்ஸ் ஆப் பே வசதியினை அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகின்றது.
இதனை முதலில் அதிக பயனர்களைக் கொண்ட இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே அடுத்த வருடம் முதல் இச் சேவையினை அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகின்றது.
இதேவேளை குறித்த சேவையினை வழங்குவதற்காக இந்தியாவின் சுமார் 160 வங்கிகளுடன் பேஸ்புக் இணைந்து பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.