“தோல்வி அடைய விரும்பவில்லை!!!”… ‘உணர்ச்சிபூர்வமான பேச்சால் கண்கலங்கிய நிர்வாகிகள்?!!’… ‘கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அதிரடி!’
மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், “மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் கருத்தை என்னிடம் கூறினார்கள். நானும் என் கருத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன். பேருக்கு கட்சி தொடங்கி 10-15 வாக்குகள் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை. தேர்தல் களத்தில் நின்றால் வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் அவர்கள் இந்த நேரத்தில் வெளியில் சென்று உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் அவர்களுடைய உணர்ச்சிபூர்வமான உரையால் மக்கள் மன்ற நிர்வாகிகள் கண் கலங்கியதாகவும், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் ரஜினிகாந்த் அவர்களுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.