Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

வடக்கு மாகாணம்

நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நுவரெலியா மேல் நீதிமன்றம்!

பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்காக நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்று (02) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

1998 ஆம் ஆண்டு நானுஓயா, பொலிஸ் பிரிவில் நிகழ்ந்த கொலைக்காக 47 வயதுடைய ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

2019 ஆம் ஆண்டு பட்டிப்பொலவில் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 55 வயதுடைய நபர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், 1990 ஆம் ஆண்டு பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளாகக் கணப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button