உலகம்
Trending

மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக உரையாடிய ரஷ்ய - ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர இராணுவ நெருக்கடியைத் தணிப்பது குறித்து ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோர் நேற்று (27) இந்தத் தொலைபேசி உரையாடலை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள மிக மோசமான அரசியல் – இராணுவ நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய மோதலை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட முறையிலும், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களைக் கருத்தில் கொண்டும் ஒரு அரசியல் – இராஜதந்திர தீர்வை நோக்கி நகர்த்துவது குறித்து இரண்டு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதன்போது ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை என ரஷ்ய அமைச்சர் சாடியுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button