உலகம்

இஸ்ரேலுக்கான தூதுவரை திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கான தனது நாட்டுத் தூதுவரை நிரந்தரமாகத் திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

காசா விவகாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த இராஜதந்திர முரண்பாடுகளின் உச்சக்கட்டமாக இந்த தீர்மானத்தை இஸ்பெயின் எடுத்துள்ளது.

இனிவரும் காலங்களில், இஸ்ரேலுக்கான ஸ்பெயினின் தூதரகத்தை முழுநேரத் தூதுவருக்குப் பதிலாக, இடைக்கால அதிகாரியே வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது.

அண்மையில் பலஸ்தீனத்தைத் தனிநாடாக இஸ்பெயின் அங்கீகரித்தமையும் இந்த உறவு விரிசலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button