இலங்கை
Trending

உலக முடிவில் செல்பி எடுத்தபோது தவறிவீழ்ந்த மாணவி உயிருடன் மீட்பு!

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ பகுதியில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் வீழ்ந்த மாணவி மீட்க்கப்பட்டுள்ளார்.

பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின் குறித்த மாணவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் செல்பி எடுக்கும்போது நேற்று(19) தவறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.

தவறி விழ்ந்தவர் மரக்கிளை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், அதனை அவதானித்த வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பள்ளத்தில் இறங்கி, மரக்கிளையில் தொங்கிய மாணவியை மீட்டு அருகிலிருந்த ஒரு பாறை இடுக்கில் பாதுகாப்பாக அமர வைத்தார்.

அதனைத் தொடர்ந்து
பொலிஸார், இராணுவதினர், வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின்னர் மாணவியை மேலே கொண்டு வந்துள்ளனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மாணவி தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button