
குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்றிரவு (03)இடம்பெற்றது.
புதுமை வலைத் தொலைக்காட்சியின் இயக்குநர் ஈளங்கீரனின் தலைமையிடம் இடமபெற்ற நிகழ்வில், தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அரங்க நிகழ்வில், இணுவில் ஸ்ரீவாசனா இசை மன்ற மாணவர்களின் குழுவின் இசை அரங்கம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவர்களின் பரத நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் “வானமே சாட்சியாய்..” என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.

கவிஞர் சு.க. சிந்துதாசன் தலைமையிடம் இடம்பெற்ற கவியரங்கத்தில், அணிசேர் கவிஞர்களாக கவிஞர் கோகுலன் கவிஞர் ரஜனிகாந்தன், கவிஞர் இளந்திரையன், கவிஞர் செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.


![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)

