இலங்கைஉலகம்மேல்மாகாணம்
Trending
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு – தலவத்துகொட பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு,ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த தீ விபத்து இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நால்வரில் மூவரே உயிரிழந்துள்ளனர்.
மற்றையவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us


