
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அதன்படி ,ஒக்டேன் 95 ரக பெற்றோல் 7 ஆயிரம் மெற்றிக் தொன் மற்றும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 29 ஆயிரம் மெற்றிக் தொன் ஆகியவற்றை ஏற்றிய நாளை (10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
அதேபோன்று நாளை மறுதினம் (11) 29 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதற்கிடையே 32 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7ஆயிரத்து 200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் ஏற்றிவந்த கப்பலிலிருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் கொழும்புத் துறைமுகத்தில் தற்போது இடம்பெற்றுவருவதாக
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டார்.



